மேலும் செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர்கள்
25-Nov-2024
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.பழநி முருகன் கோயிலில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். ரோப்கார்,வின்ச் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். வெளி மாநில, வெளியூர், உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் தனி வழி மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கிரி வீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால் பேட்டரி கார், பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பாத விநாயகர் கோயிலில் தட்டு கடை வியாபாரிகள் தொல்லை அதிகரித்தது. போலி கைடுகள் முருகன் கோயில்,அடிவாரம் பகுதிகளில் வெளியூர் பக்தர்களை ஏமாற்றும் நோக்கில் பணம் பறிக்கின்றனர். எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம் என அழைத்து சென்று பணம் பறிக்கின்றனர். ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் எந்த விதமான கைடுகளும் நியமிக்கப்படவில்லை. போலி கைடுகளை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்.
25-Nov-2024