மேலும் செய்திகள்
மாவட்ட கிரிக்கெட் போட்டி: விக்னேஷ் அணி வெற்றி
27-Feb-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் , சென்னை சூப்பர் கிங்ஸ் இணைந்து நடத்திய கல்லுாரிகளுக்கிடையேயான மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டியில் என்.பி.ஆர்., கல்லுாரி அணி வென்றது.ரிச்மேன், என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்த லீக் போட்டியில்நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 184/9. சுஜிந்திரன் 48(நாட்அவுட்), ஹரிஷ்குமார், ரிஷிகுமார் தலா 3 விக்கெட். சேசிங் செய்த ஆத்துார் கோ-ஆப்ரேட்டிவ் ஆர்ட்ஸ் கல்லுாரி அணி 10.3 ஓவர்களில் 35 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. மதிசெல்வம் 5, சின்னையா 3 விக்கெட் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்த காந்திகிராம் பல்கலை அணி 30 ஓவர்களில் 217/8. சபரீஸ்வரன் 57, கந்தசாமி 49, பிரகாஷ் 3 விக்கெட் . சேசிங் செய்த ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி அணி 18.1 ஓவர்களில் 62 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சபரீசன் 4, பாண்டியராஜன் 3 விக்கெட்.திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 124/8. கமல்நாத் 52. சேசிங் செய்த ஜி.டி.என்., ஆர்ட்ஸ் கல்லுாரி அணி 13.4 ஓவர்களில் 125/3 எடுத்து வென்றது.முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் யுனிவர்சிட்டி பொறியியல் கல்லுாரி அணி 22.2 ஓவர்களில் 155 க்கு ஆல்அவுட். தினேஷ்குமார், வீரதரணீஸ்வரன் தலா 3 விக்கெட். சேசிங் செய்த எஸ்.எஸ்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி அணி 17.1 ஓவர்களில் 74 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. அனைகுட்டி 4 விக்கெட். திண்டுக்கல் எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 250/7. கேசவராஜ் 61, அர்னால்ட்ஸ்மித் 45, இறையன்பு 3 விக்கெட். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி அணி 13.1 ஓவர்களில் 60 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. பாலசூர்யா 3 விக்கெட். திண்டுக்கல் ஜி.டி.என்., குழும அணி 25 ஓவர்களில் 259/5. சஞ்சய்வெங்கடேஷன் 97, அன்பரசன் 71, கிேஷார்குமார் 46. சேசிங் செய்த எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 125/6 எடுத்து தோற்றது.
27-Feb-2025