உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் சைக்கிள் போட்டி

திண்டுக்கல்லில் சைக்கிள் போட்டி

திண்டுக்கல்: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த போட்டியை ஏ.டி.எஸ்.பி., மகேஷ் துவங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டனர். 13,15 ,17 பிரிவுகளின் கீழ் நடந்த போட்டிகளில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 13 வயது பிரிவில் திண்டுக்கல் 8ம் வகுப்பு மாணவன் கிஷோர், 15 வயது பிரிவில் கோவிலுார் 9ம் வகுப்பு மாணவன் ஹரிஸ், 17 வயது பிரிவில் கிழக்கு மீனாட்சி நாயக்கம்பட்டி 11ம் வகுப்பு மாணவன் சிபி ராம் முதலிடத்தை பிடித்தனர். 13, 15 ,17 வயது பிரிவில் விளையாட்டு விடுதி மாணவிகள் சாலினி, இளந்தென்றல், தர்ஷினி முதலிடத்தை பிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் 10 இடங்கள் பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசு , சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை