தடுப்பணை திறப்பு
ஒட்டன்சத்திரம் : அரசப்பபிள்ளைபட்டியில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே ரூ.2.65 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன், செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் விஜய மூர்த்தி, உதவிப் பொறியாளர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் சுரேஷ்குமார் விவசாயிகள் தடுப்பணையில் மலர் துாவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.