மேலும் செய்திகள்
அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
27-Sep-2024
திண்டுக்கல்: டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலியை மாத சம்பளமாக வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு வழங்குவதுடன் பணி நீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் குஜிலியம்பாறை பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளரை கண்டிப்பது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ஜெயவேல் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். சங்க கவுரவ தலைவர்கள் டாக்டர்கள் சாந்தி, ரவீந்திரநாத் பேசினர்.
27-Sep-2024