உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சிகள் அழிப்பு

கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சிகள் அழிப்பு

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் கெட்டுப்போன இறைச்சிகள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி 15 கிலோ கெட்டுப்போன ஆடு ,கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.கோபால்பட்டி பகுதியை சுற்றிய இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தகுமார், ஜஸ்டின் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கெட்டுப்போன 15 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.3 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தலா ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாறைப்பட்டியில் ஹக்கீம் என்பவர் மளிகை கடையில் இருந்த தடை புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளருக்கு ரூ 25,000 அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை