உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

இடையகோட்டை:திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை வலையபட்டியில் ராயர் குலவம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா குலவிளக்கு ஏற்றப்பட்டு தொடங்கியது. 2ம் நாளான நேற்று பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து, பின்னர் வேண்டிய வரம் கேட்பவர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது. பூஜாரி பூச்சப்பன் 45க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து அவர்களின் நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். மூன்றாம் நாளான இன்று பரிவார தெய்வங்களுக்கு பொங்கல்,சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி