உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அயோத்தி சென்ற பக்தர்கள்

அயோத்தி சென்ற பக்தர்கள்

திண்டுக்கல் : அயோத்தி ராமர் கோயிலுக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பாக 2ம் கட்டமாக நேற்று 227 பக்தர்கள் சென்றனர். திண்டுக்கலில் இருந்து பஸ் மூலமாக திருப்பூர் சென்று ரயில் மூலமாக அயோத்தி செல்லும் இவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். வர்த்தக பிரிவு மாநில செயலாளர் நாராயணசாமி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், வர்த்தகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், கல்வியாளர் பிரிவு வெங்கடேசன் , மாவட்ட பொருளாளர் மணிகண்டன், அலுவலக செயலாளர் பாலகிருஷ்ணன், அண்டை மாநில தமிழர் நலன் பிரிவு ரமேஷ், சின்னாளப்பட்டி நகர தலைவர் விக்கேஷ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி