உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் டிஜிட்டல் ஆலோசனை பெட்டி

பழநி கோயிலில் டிஜிட்டல் ஆலோசனை பெட்டி

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் ஆலோசனைகளை பெற டிஜிட்டல் பெட்டி திறக்கப்பட்டுள்ளது.இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோயில் மேம்பாட்டுக்காக பக்தர்களின் ஆலோசனைகளை பெற ஹிந்து அறநிலையத்துறை அறிவுறுத்தலின்படி வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள கோயில் அலுவலகத்தில் டிஜிட்டல் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பழநி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி இதை திறந்து வைத்தார். இணைக்கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை