திண்டுக்கல்லில் தினமலர் வழிகாட்டி இன்று துவக்கம் : உயர்கல்வியை தேர்வு செய்ய கருத்தரங்குகள்: கல்லுாரிகளை தேர்வு செய்ய அரங்குகள்
திண்டுக்கல்: பிளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (ஏப்., 4) திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே.மகாலில் துவங்குகிறது. நாளையும் நடக்கிறது.பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி இன்றும், நாளையும் திண்டுக்கல் பி. வி.கே. மகாலில் நடக்கிறது. கல்வி கண்காட்சிகள், கருத்தரங்குகளும் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது.கருத்தரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் நுாற்றுக்கணக்கான அபூர்வ படிப்புகள் தொடர்பாக நிபுணர்கள் பேசஉள்ளனர். இன்று பேசுபவர்கள்
இன்று காலை 10:00 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் நடக்கும் கருத்தரங்கில் நீட் ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ் தொடர்பாக கல்வி ஆலோசகர் அஸ்வின், அனைவருக்கும் ஐ.ஐ.டி., என்ற தலைப்பில் சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, சி.ஏ.,படிப்பு குறித்து ஆடிட்டர் அருண், கலை, அறிவியல் படிப்பு பற்றி பேராசிரியர் சந்தானகிருஷ்ணன், மரைன் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் குறித்து பேராசிரியர் சுரேஷ் குமார், மீடியா, அனிமேஷன் பற்றி பேராசிரியர் கிஷோர் குமார், நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் தலைப்பில் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லிபாபு, எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, கடல்சார் படிப்புகள் குறித்து கேப்டன் கப்ரியல் பூபாலராயன், தொழிலக பாதுகாப்பு படிப்புகள் பற்றி பேராசிரியர் ராம்குமார் ஆகியோர் பேசு கின்றனர்.நாளைய கருத்தரங்கில் இன்ஜினியரிங் படிப்புகள்- பேராசிரியர் விஜயசாமூண்டேஸ்வரி, உயர்கல்வி- ஐ.எப்.எஸ்., அதிகாரி சுதா, ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன்- பேராசிரியர் டேவிட் ரத்தினராஜ், வணிகம், வணிக மேலாண்மை- பேராசிரியை பத்மாவதி, சைபர் பாதுகாப்பு படிப்புகள்- பேராசிரியர் தினேஷ் பரந்தாகன்,ஐ.டி.,துறையின் எதிர்காலம்- சுவாமி பேராசிரியர் சிதானந்தமிர்தா ஆகியோர் பேசுகின்றனர். அனைத்து விபரங்களும் ஒரே இடத்தில்...
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்லுாரிகளுக்கான விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகளும், கல்விக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரே இடத்தில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லுாரிகளைத் தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR Code ஸ்கேன் செய்து அல்லது 95667 77833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு RGN என்று டைப் செய்து அனுப்பவும். அனுமதி இலவசம்.இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது. மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி, கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.