உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து வன்னியர் எம்.பி.சி., உரிமையை கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கொடுங்க திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் வலியுறுத்தல்

ஹிந்து வன்னியர் எம்.பி.சி., உரிமையை கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கொடுங்க திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் வலியுறுத்தல்

திண்டுக்கல: ''ஹிந்து வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.சி., உரிமையை கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கொடுக்க வேண்டும்'' என திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : கிறிஸ்தவ வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உரிமை கேட்டு நாளை (இன்று) மாநாடு நடக்கிறது. எந்த ஒரு கட்சிக்கும், மதத்திற்கும், இனத்திற்கும் எதிரானது அல்ல. ஹிந்து வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட எம்.பி.சி., உரிமையை கிறிஸ்தவ வன்னியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. மதத்தின் பெயரால் எங்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட கூடாது என்பது தான் மாநாட்டின் நோக்கமாகும். தி.மு.க., ஆட்சிக்கு எதிராக மாநாடு நடத்தவில்லை. பா.ம.க. ஆதரவும் இருக்கிறது.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி. பட்டியலில் இடம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அடுத்த தேர்தலுக்கு முன்பாக கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தான் மாநாடு நடத்துகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ