உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பராமரிப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று துவக்கினர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டதால் கழிப்பறைகள்,கூரைகள், பஸ் ரேக்குகள், உள் பகுதி ரோடுகள் என எல்லா பகுதிகளும் சேதமாகி உள்ளன. மழை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் கூரைகள் பயணிகள் மேல் பெயர்ந்து விழுகிறது. சேதமான பகுதிகளை சீரமைக்க உயர் அதிகாரிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பபட்ட நிலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சேதமான கழிப்பறைகள்,பெயர்ந்து விழும் சுவர்கள்,பஸ் ரேக்குகளை பராமரிக்கும் பணிகள் துவக்கின . சில தினங்களில் பணிகள் முடிந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ