உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி உதவியாளர் பணியில் மாற்றமில்லை

ஊராட்சி உதவியாளர் பணியில் மாற்றமில்லை

நிலக்கோட்டை : ஊராட்சி உதவியாளர்களை, ஊராட்சி செயலாளராக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தற்போதைய பணிமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களாக மாற்றப்படுவர் என சட்டசபையில், உள்ளாட்சி மானியக் கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி ஊராட்சி செயலாளராக மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு முதன்மை செயலாளர் பழனியப்பன் வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 2006 ல் வழங்கப்பட்ட காலமுறை ஊதியத்துடன், சிறப்பு படியாக 500 ரூபாய் சேர்த்து வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. பணி வரன்முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்