வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓணம் பண்டிகைக்கு பாலகாட்டிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் வண்டிகள் விடப்படும்.
திண்டுக்கல் -பாலக்காடு அகல ரயில் பாதை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் போதுமான ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பழநி முக்கியமான வழிபாட்டுத் தலமாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பழநியில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்களில் அதிகமான பக்தர்கள் பஸ்சில் தான் பயணிக்கின்றனர். இதை கருதி பழநியில் இருந்து திருச்சி வழித்தடத்தில் தஞ்சாவூர், கும்பகோணத்திற்கு பயணிகள் தினமும் முன்பதிவில்லா ரயிலை இயக்க வேண்டும். கும்பகோணம் பகுதியை சுற்றி நவக்கிரக கோவில்களை இணைக்கும் வகையில் இந்தரயிலை இயக்கலாம் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.மேலும் பொங்கலுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பழநி வழியில் சிறப்பு ரயில்கள் இடம் பெறாதது இப்பகுதி பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கருதி திண்டுக்கல், பழநி ,பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயிலை இயக்க வேண்டும். இது போல் தைப்பூசத்திற்கும் பல பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதும் அவசியமாகிறது .
ஓணம் பண்டிகைக்கு பாலகாட்டிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் வண்டிகள் விடப்படும்.