தீபாவளி கொண்டாட்டம்
நத்தம்: மூங்கில்பட்டி ஆதரவற்றவர்கள் கருணை இல்லத்தில் தமிழ்வேள் முன்னேற்ற கழகம் சார்பில் தீபாவளி கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் சரவணச்செல்வம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் வெற்றிவேலன், முதன்மை செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஆறுமுகம் கருணை இல்ல ஆதரவற்ற பெண்கள், முதியோர்களுக்கு புத்தாடை, பட்டாசுகள், இனிப்புகளை வழங்கினார்.