உள்ளூர் செய்திகள்

தி.மு.க., கபடி போட்டி

செந்துறை : செந்துறை அருகே சித்திரைகவுண்டன்பட்டியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பெண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது.35-க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை அரியலுார் அணி, 2-ம் பரிசை கரூர் அணி, 3-ம் பரிசை பொள்ளாச்சி அணி, 4-ம் பரிசை - கோவில்பட்டி அணி வென்றன. இதற்கான பரிசளிப்பு விழா வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் பரிசு ,கோப்பை , கேடயங்களை வழங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை