தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
திண்டுக்கல்: உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி,மாவட்ட துணை செயலாளர்கள்நாகராஜன் தலைமை வகித்தனர்.மேயர் இளமதி,ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை,நெடுஞ்செழியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர்,மாநகர அவை தலைவர் முகமது இப்ராகிம்,மாநகர துணைசெயலாளர் அழகர்சாமி,பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன்பங்கேற்றனர்.வடமதுரையில் நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் நகர செயலாளர் எஸ்.கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளிராஜன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம் பங்கேற்றனர்.