உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உணவில் விஷம் கலந்து கொடுத்து நாய்கள் கொலை

உணவில் விஷம் கலந்து கொடுத்து நாய்கள் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளன.திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று காலை துாய்மை பணியாளர்கள் பணிக்கு சென்றபோது ஆங்காங்கே நாய்கள் இறந்து கிடந்துள்ளன. 19 நாய்கள் இறந்து கிடந்ததை அறிந்து விலங்குகள் நல வாரியத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நாய்கள் கால்நடை மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை நடந்தது. இதில் நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொன்று இருப்பது தெரியவந்தது. பிராணிகள் வதை தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறையினர் தொற்று ஏற்படாத வகையில் நாய்கள் மீது மருந்துகள் தெளித்து 10 அடி ஆழத்தில் குழி தோண்டி அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை