உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு

வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு

வடமதுரை : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நத்தம் மேற்கு தெரு வை சேர்ந்தவர் ஜாஸ்மின்(22). இவருக்கும், தஞ்சாவூர் ராஜகிரி பிஸ்னி தெருவை சேர்ந்த ரியாஸ்அகமது(26)வுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை தரப்பட்டது. தற்போது மேலும் 28 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் வரதட்சணை கேட்டு ஜாஸ்மினை, கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். ஜாஸ்மின் புகாரில், வடமதுரை மகளிர் போலீசார் விசாரித்து, கணவர் ரியாஸ் அகமது, மாமியார் ஆயிசாகனி. உறவினர்கள் ஆமீனாபீவி, ரசீத்அகமது மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை