உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது போதையில் வாகனம் ஓட்டுவோர்.. அதிகரிப்பு: அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கை

மது போதையில் வாகனம் ஓட்டுவோர்.. அதிகரிப்பு: அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கை

மாவட்டத்தை பொருத்தமட்டில் விவசாயம், ஆன்மிகம், சுற்றுலா, வணிகம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. நாள்தோறும் வாகன பயன்பாடு என்பது இன்றியமையாத நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிவேக வாகனங்கள் தற்போது சந்தையில் உலா வருகின்றன. அதே நேரத்தில் டிரைவர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் சரக்கு வாகனங்கள் இயக்குபவர்களில் பெரும்பகுதியினர் அனுபவப்பட்டநிலையில் கிளீனராக சென்று டிரைவராக உருமாறுகின்றனர். இவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத சூழலால் விபத்துக்கள் தொடர்கின்றன.மேலும் ரோட்டோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஓய்வெடுக்கும் டிரைவர்கள் மது அருந்திய நிலையில் வாகனங்களை இயக்குகின்றனர். இவர்களால் எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. பெயரளவிற்கு போலீசார் வாகன சோதனை செய்த போதும் மது போதையில் இயக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அபராதம் மட்டுமன்றி இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மதுபோதையில் வாகன ஓட்டும் நடைமுறை கட்டுப்படுத்த ஏதுவாக அமையும். போக்குவரத்து விதிமுறைகளில் இது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது எதிர்காலத்தில் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுபோதையில் வாகன ஓட்டும் செயல்கள் கட்டுப்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanisamy T
செப் 04, 2025 08:41

எங்க ஊர் சட்டம் வேறுமாதிரி. போதையில் பிடிபட்டால் உடன் நடவடிக்கை. ஓட்டுநர் உரிமம் பறிமுதல், கைது, கட்டாய நீதிமன்ற நடவடிக்கை, குறைந்த பட்ச கட்டாய தண்டம் சிறை என்றாகிவிடும். இம் மாதிரியான சட்டதை தமிழக அரசு உடனே கொண்டுவரவேண்டும். பல குடும்பங்கள் இதனால் சீரழிகின்றது. இதன் மூலம் குடிப் பழக்கத்திற்கு அடிமையான குடிகாரார்களை கொஞ்சம் குறைக்கலாம் கட்டுப் படுத்தலாம் குறிப்பாக டாஸ்மாக் குடிகாரார்களை. மக்களுக்கு நல்லதுதானே.


Vasan
செப் 04, 2025 07:04

Please close all TASMAC shops and stop liquor sales in Tamilnadu. People will not consumers liquor and drive safely. Those policemen, who are checking whether people other than them have drunk, will be free, and they can be used for traffic regulation, rather than standing behind tree and jumping into the middle of road when vehicle comes. Many accidents happen when policemen jump like that.