| ADDED : நவ 15, 2025 05:04 AM
சித்தையன்கோட்டை: 'கல்வி மட்டுமே நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து என்பதை உணர்ந்து மாணவர்கள் உயர் கல்வி கற்க வேண்டும்' என அமைச்சர் பெரியசாமி பேசினார். ஆத்தூர், சித்தையன்கோட்டையில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் உஷா நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத்தலைவர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பெரியசாமி பேசுகையில், 'ஆத்தூர் தொகுதியில் ஏழை மாணவர்கள் நலன் கருதி, அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில் ரெட்டியார்சத்திரத்தில் அண்ணா பொறியியல் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, ஆத்தூரில் கூட்டுறவுத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கலை கல்லூரி கொண்டுவரப்பட்டது. முன்னதாக, உயர்கல்வி கற்க மதுரை அல்லது திண்டுக்கல் செல்ல வேண்டி இருந்தது. தற்போது வசிப்பிடத்தின் அருகிலேயே உயர் கல்வி கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. கல்வி மட்டுமே நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து. அதை உணர்ந்து மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி பெற்று மேல்நிலையை அடைய வேண்டு ம்' என்றார்.--