உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / "ஈகோ பிரச்னை: மணல் குவாரி மூடல்

"ஈகோ பிரச்னை: மணல் குவாரி மூடல்

பழநி : அரசியல் பிரமுகர்களுக்கும், மணல் வாகன டிரைவர்களுக்கும் இடையேயான 'ஈகோ' பிரச்னையால், நேற்று பழநி மணல்குவாரி மூடப்பட்டது. இதனால் 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இங்கு ஜூலை 14 ல், மணல் விற்பனை துவங்கியது. ஒரு யூனிட்டிற்கு 313 ரூபாயை, அரசு நிர்ணயித்த போதும், அ.தி. மு.க., வினர் தலையீட்டால், 1000 ரூபாய் வரை வசூல் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்றே மணல் வாகன டிரைவர்கள் 'ஸ்டிரைக்' செய்தனர். இதை தவிர் க்க, கட்டணத்தை டி.டி., யாக வழங்க அறிவுறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் தொகையை டி.டி.,யாகப் பெற, குவாரி ஊழியர்கள் மறுத்தனர். மணல் அள்ள வந்த வாகனங்கள் அனைத்தும், வழிமறித்து நிறுத்தப்பட்டன. ஆர்.டி.ஓ., வேலுச்சாமி சமரச பேச்சு நடத்தி, பணமாகவோ, டி.டி., யாகவோ பெற உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று, அ.தி.மு.க., வினர், 'ஈகோ' பிரச்னையால் மணல் குவாரி கதவை பூட்டினர். இதையடுத்து வாகனங்கள் அணிவகுத்து காத்துக்கிடந்தன. மாலை 3 மணிக்கு பிரச்னை முடிந்தது. பொதுப்பணித்துறை களஆய்வாளர் ரங்கராஜ் கூறுகையில், ''உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, அங்கிருந்து வெளியேறி விட்டேன்'' என்றார். உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''மணல் பெறுவதில் முன்னுரிமை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, மாலை 3 மணி முதல் மணல் எடுத்துச் செல்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ