உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒன்றரை ஆண்டாகியும் வழங்கல மின் இணைப்பு; ரூ.2.75 லட்சம் செலுத்திய விவசாயிகள் ஏமாற்றம்

ஒன்றரை ஆண்டாகியும் வழங்கல மின் இணைப்பு; ரூ.2.75 லட்சம் செலுத்திய விவசாயிகள் ஏமாற்றம்

தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருவதால் விவசாயிகளும் ஓரளவு சிரமமின்றி விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மின்சார இணைப்பு கேட்டு ஏராளமானோர் மனு கொடுத்துள்ளதால் 2013 வரை மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு மனு கொடுத்தவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி தட்கல் முறையில் ரூ.2.75 லட்சம் செலுத்தினால்30 நாட்களுக்குள் கட்டணமில்லா மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பு மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது. இதனால் உடனடியாக மின் இணைப்பு பெற விரும்பிய விவசாயிகள் புதிதாக போர்வெல் அமைத்து மின் மோட்டார் பொருத்தி போதிய வருவாய் சான்றுகளுடன் ரூ.2.75 லட்சத்தை தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பம் செலுத்திய விவசாயிகள் பணம் செலுத்தி ஒன்றரை ஆண்டும் கடந்தும் மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருப்பதாக குமுற துவங்கி உள்ளனர். இது மட்டுமின்றி மின் இணைப்பு கிடைக்காததால் புதிதாக அமைத்த போர் வெல் , மின் மோட்டார் பழுதாகி செலவு செய்த பணம் அனைத்தும் வீணாகி விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raj
ஜன 06, 2025 07:03

கேட்டால் பட்ஜெட் பற்றாக்குறை என்பார்கள். ஏன் டி ஆர் பி, ஜெகத், தொரை, ....... உள்ளிட்ட மலை முழுங்கி களிடமிருந்து வசூல் செய்து கொடுக்கலாமே.


Paramasivam
ஜன 04, 2025 11:53

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தான் இது. இரண்டு திருட்டு திராவிட மாடல் ஆட்சியிலும் இதே நிலைதான் . நாங்கள் 1987 ல் பதிவு செய்து 24 ஆண்டுகள் கழித்து 2011ல் தான் மின் இணைப்பு கிடைத்தது. நாங்கள் விவசாயிகளுக்கு அதை செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று வெற்று விளம்பரங்கள் மட்டுமே.


தமிழன்
ஜன 03, 2025 13:48

வீடியோ ஆட்சி அமைந்ததும் 2022 ஜனவரி மாதம் எனக்கு கடிதம் வந்தது அதில் 2017 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்த சுயநிதி மின் இணைப்பு விண்ணப்பத்தில் 50 ஆயிரம் கட்டினால் மின் இணைப்பு வழங்கப்படுவதாக ஒரு மாதத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லி இருந்தது ஆவணங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பித்த பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை இப்பொழுது 2025 ஆகிவிட்டது மூன்று வருடம் கழித்தும் மின் இணைப்பு வழங்கப்படாத அல்லது வழங்க முடியாத மின்சார வாரியம் ஏன் 2022 ஆம் ஆண்டு வெற்று கடிதத்தை அனுப்பி மின் இணைப்பு வழங்குவதாக நாடகமாடி விவசாயிகளை அலைக்கழித்தது என்று தெரியவில்லை


தமிழன்
ஜன 03, 2025 13:45

2011 ஆம் ஆண்டு பதிவு செய்த விண்ணப்பித்திருக்க கூட இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை நவம்பர் மாதம் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் முன்பு விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது அதில் ஒரு விவசாயி 2007 ஆம் ஆண்டு மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து இன்னும் வழங்கப்படவில்லை என்று புகாரோடு வந்திருந்தார் எல்லாமே ஒரு கண்தொடைப்பு தான்


S. Neelakanta Pillai
ஜன 03, 2025 11:22

மின் குறை தீர் மன்றம் புகார் அளிக்கலாம் அல்லது நுகர்வோர் மாவட்ட நீதி மன்றம் சென்றால் தீர்வு கிடைக்கலாம். நுகர்வோர் காண்டாக்ட் நெம்பர் கிடைத்தால் இலவச சேவை வழங்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை