உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துாரில் மின் பகிர்மான கோட்ட அலுவலகம் துவக்கம்

வேடசந்துாரில் மின் பகிர்மான கோட்ட அலுவலகம் துவக்கம்

வேடசந்தூர்: வேடசந்துாரில் மின் பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனால் விவசாயிகள் அலைச்சல் இன்றி வேடசந்தூரிலேயே பயன் பெறும் நிலை உருவாகி உள்ளது.வேடசந்துார் தொகுதியில் வேடசந்துார், எரியோடு, குஜிலியம்பாறை, வடமதுரை என நான்கு மின்வாரிய சப் டிவிஷன்கள் உள்ளன. வேடசந்துார் ஒன்றிய பகுதி மக்கள் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மின் பகிர்மான கோட்ட அலுவலகம், எரியோடு, குஜிலியம்பாறை, வடமதுரை பகுதி மக்கள், திண்டுக்கல்லில் உள்ள அலுவலகத்திற்கும் சென்று, தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு, விவசாயத்திற்கான மின் இணைப்பு உள்ளிட்ட தேவைகளை பெற்று வந்தனர். வேடசந்துார் தொகுதி மக்களின் நலன்கருதி மின் பகிர்மான கோட்ட அலுவலகம் வேடசந்துார் பழைய ஒன்றிய அலுவலகத்தை சீரமைத்து துவக்கப்பட்டது. உணவு த்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., காந்தி ராஜன் முன்னிலை வகித்தார். உதவி செயற் பொறியாளர் முத்துப்பாண்டியன் வரவேற்றார்.அமைச்சர் பேசியதாவது; வேடசந்துாரில் மின் பகிர்மான கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் சிரமமின்றி பயன்பெறலாம். இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கருவேல முட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றை ஊராட்சி வாரியாக தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து அகற்ற முன்வர வேண்டும். குளங்களில் காவிரி நீரை கொண்டு வந்து நிரப்ப ஆய்வுப் பணி நடப்பதால் விடுபட்ட குளங்கள் இருந்தால் பட்டியலில் சேர்க்கலாம் என்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிசங்கர், கவிதாமுருகன், மருத பிள்ளை, ஆரோன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ