சிறுமியை கர்ப்பமாக்கிய ஊழியர் கைது
சாணார்பட்டி : திண்டுக்கல் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான தனியார் நிறுவன ஊழியரை சாணார்பட்டி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.எ.வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் சுதன்ராஜ் 45.தனியார் நிறுவன ஊழியர்.இவருக்கு திருமணமாகி மனைவி , 12 வயதில் மகன் உள்ளார். அப்பகுதி 18 வயது சிறுமியிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.அந்த நட்பு காதலாக மாறியது. இதை தொடர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.அதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார்.சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது சிறுமி கர்ப்பமானது தெரிந்தது. கர்ப்பத்துக்கு காரணமான சுதன் ராஜை போக்சோவில் சாணார்பட்டி மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.