உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எல்லாம் போச்சு: திட்டமிடல் இல்லாத குப்பை தொட்டிகள் இல்லா திட்டத்தினால் ரோட்டோரங்கள், பொது இடங்களில் குப்பை

எல்லாம் போச்சு: திட்டமிடல் இல்லாத குப்பை தொட்டிகள் இல்லா திட்டத்தினால் ரோட்டோரங்கள், பொது இடங்களில் குப்பை

திண்டுக்கல் - திட்டமிடல் இல்லாத குப்பை தொட்டிகள் இல்லா திட்டத்தினால் குப்பைத் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்கள், பொது இடங்களில் குப்பை நிரம்பி வழிவதோடு நோய் தொற்றுக்கும் வழி வகுக்கின்றன.ஓராண்டிற்கு முன்பு வரை மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட துாரத்தில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. குப்பை அள்ளுவோர் வரவிட்டாலும் பொதுமக்கள், கடை ஊழியர்கள் இந்த தொட்டிகளில் குப்பை கொட்டி செல்வர். இதனால் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் குப்பை தொட்டிகள் இல்லா திட்டம் கொண்டு வரப்பட்டு மாவட்டம் முழுவதும் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து வீடுகளிலும் துாய்மை பணியாளர்கள் குப்பையை பெற்றுக் கொள்வர் என தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டங்களை செயல்படுத்தும் முன் முறையான திட்டமிடல் ஏதும் இல்லாமல் அமல்படுத்தி உள்ளனர். அதன்படி வீடுகளில் குப்பை பெற்றாலும் இதுவும் முறையாக நடைபெறவில்லை. வணிக நிறுவனங்களோ காலையில் 10:00 மணிக்குதான் தங்களின் கடைகளை திறக்கின்றன .துாய்மை பணியாளர்கள் காலையிலே வந்து செல்லும் நிலையில் குப்பை தொட்டிகள் இல்லாததால் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி செல்கின்றனர். இதேபோல் பொதுமக்களும் காலையில் வரும் துாய்மை பணியாளர்களிடம் குப்பையை கொடுக்காமல் விட்டுவிட்டால் அவர்களும் தொட்டிகளை தேடி சென்று இல்லாததால் ரோட்டோரங்களில் கொட்டுகின்றனர்.திண்டுக்கல் மாநகராட்சி புறநகர் பகுதிகள் முழுவதுமே குப்பை நிரம்பியிருக்கிறது. இதிலும் பழநி ரோடு, மதுரை ரோடு என நகரை விட்டு வெளியே செல்லுமிடமெல்லாம் குப்பை மையமாக உள்ளது. ஒரு திட்டத்தை அமல்படுத்தும்போது நடைமுறைக்கு சாத்தியமா என்று ஆய்வு செய்துதேவையான ஊழியர்கள் உள்ளனரா, போதுமான துாய்மைபடுத்தும் கருவிகள் இருக்கிறதா என்றெல்லாம் யோசிக்காமல் கொண்டுவந்ததன் விளைவு தான் நிரம்பி வழியும் குப்பைகளுக்கு காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Joe Rathinam
பிப் 01, 2025 09:39

நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை