உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எதிர்பார்ப்பு: காஸ் மானியம் கிடைக்காமல் அவதி: பல மாதங்களாக சஸ்பென்ஸ் நீடிப்பு

எதிர்பார்ப்பு: காஸ் மானியம் கிடைக்காமல் அவதி: பல மாதங்களாக சஸ்பென்ஸ் நீடிப்பு

மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து வருகிறது. துவக்கத்தில் சிலிண்டருக்கு மானியத் தொகை ரூ. 120 என இருந்தது. சிலிண்டரின் விலை குறைவால் தற்போது ரூ. 46 வரவு வைக்கப்பட்டு வந்தது. இதை தவிர மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு ரூ. 340 மானியமாக கிடைத்தது. இந்த தொகையும் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் இலவசமாக காஸ் வீட்டு இணைப்பு பெற்றோருக்கு கணிசமான மானிய தொகையாக இருப்பதால் கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு மூன்று மாதங்கள் சேமித்து வைத்தால் ரூ. 1000க்கும் கூடுதலாக கிடைத்தது. இத்தொகை கிராமங்களில் உள்ள இரு நபர் வீடுகளுக்கு வீட்டு செலவுக்கு உபயோகமாக இருந்து வருகிறது. சில மாதங்களாக மானிய தொகையானது முறையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. பயனாளிகள் வங்கிகளில் கேட்டால் தொகை சம்பந்தப்பட்ட பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து உங்களுடைய வங்கி கணக்கு வந்துவிடும். வங்கி அதனை ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர். காஸ் விநியோகஸ்தர்களிடம் கேட்டால் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ