உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமலாக்கத்துறை அதிகாரிக்கு 7 முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 7 முறையாக காவல் நீட்டிப்பு

திண்டுக்கல்: லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு 7 வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி கைது செய்யப்பட்டார். 6 வது முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றுடன் அங்கித்திவாரிக்கு காவல் நீட்டிப்பு தேதி முடிந்ததால், மீண்டும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மதியம் 3:00 மணிக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது 7வது முறையாக நீதிமன்ற காவலை மார்ச் 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை