மேலும் செய்திகள்
குழந்தைகள் மையங்களில் சேர்க்கை துவக்கம்
04-Jun-2025
வடமதுரை : குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அவர் கூறுகையில், ஆபத்தான உலகில் குழந்தைகளை மிகவும் கவனமாக பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். குழந்தைகள் எதிர்பாராதவிதமாக பல்வேறு ஆபத்துக்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக கடலை போன்ற உணவுப் பொருள்கள், காசு, பட்டன், பேட்டரி போன்றவற்றை தவறுதலாக விழுங்கினால் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும். வீட்டில் இருக்கும் மண்ணெண்ணெய், ஆசிட் போன்றவற்றை தவறுதலாக குடித்தால் நுரையீரல். வீட்டுத் தண்ணீர் தொட்டிகளில் விளையாட செல்லும்போது நீரில் மூழ்கவும் வாய்ப்புள்ளது. விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெற்றோார்கள் குழந்தைகளை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றார்.
04-Jun-2025