உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முகம் சுளிக்க வைக்கும் மசாஜ் மையங்கள்: புதர் மண்டிய குடியிருப்பு

முகம் சுளிக்க வைக்கும் மசாஜ் மையங்கள்: புதர் மண்டிய குடியிருப்பு

கொடைக்கானல் 8வது வார்டில் அவலம்கொடைக்கானல்: முகம் சுளிக்க வைக்கும் மசாஜ் மையங்கள், புதர் மண்டிய குடியிருப்பு என கொடைக்கானல் நகராட்சி 8வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர். அண்ணாசாலை, முதலியார்புரம் 1 முதல் 4 தெருக்கள், லாஸ் காட் ரோடு, பிடி ரோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வணிக வளாகங்கள், வங்கிகள், அரசு மருத்துவமனை, தினசரி காய்கறி மார்க்கெட், வாரச்சந்தை, சுற்றுலா அலுவலகம் உள்ளது. இங்கு ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேதமடைந்த ரோடால் வாகன ஓட்டிகள் நித்தம் பரிதவிக்கின்றனர். மசாஜ் மையங்களால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை தினமும் தொடர்கிறது. புதர் மண்டிய அரசு குடியிருப்புகளால் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர். சாக்கடை வசதியின்றி கழிவு நீர் தேக்கத்தால் அவதிப்படுகின்றனர். குடியிருப்புக்கு அருகில் உள்ள கொண்டித் தொழுவம் பயன்பாடு இன்றி உள்ளது. தினசரி காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாடு இன்றி சமூக விரோத செயல்கள், பாராக பயன்படுகிறது. காட்டு மாடு, தெரு நாய் தொந்தரவுகளால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். முதலியார்புரம் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிய அரசு குடியிருப்புகளில் புதர்மண்டி உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்து நடமாட்டங்களால் அச்சுறுத்தல் உள்ளது. கவுன்சிலரிடம் கோரிக்கைகள் வைத்த போதும் கண்டு கொள்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !