கிணற்றில் விழுந்த விவசாயி மீட்பு
ஒட்டன்சத்திரம் : கல்லுப்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி 55. கிணற்றுக்குள் இருந்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் சுப்பிரமணியை உயிருடன் மீட்டனர்.