| ADDED : அக் 12, 2025 06:37 AM
வேடசந்துார் : மினுக்கம்பட்டி தனியார் சோலார் பிளான்ட் அருகே கார், டூவீலரில் வந்த 5 பேர் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களுடன் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்தனர். இதை கவனித்த நெடுஞ்சாலை ரோந்து எஸ்.எஸ்.ஐ., லாரன்ஸ் தலைமையிலான போலீசார் ஐவரையும் பிடித்து வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் தெற்கு மலையடிப்பட்டி முத்துராஜ் 27, இசக்கிமுத்து 25, விருதுநகர் மாவட்டம் கோவிலுார் பாலசுப்பிரமணி 27, விருதுநகர் இலங்கை தமிழர் அகதி முகாம் காளிமுத்து 30, ராஜபாளையம் நாகராஜ் 32, என்பதும், காப்பர் ஒயர்களை திருட முயற்சித்ததும் தெரிய வர இவர்களை வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி கைது செய்தார்.