மலர் வழிபாட்டு விழா
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா நடந்தது. ஆண்டுதோறும் கொடைக்கானலில் நடக்கும் மலர்கண்காட்சியை ஒட்டி பழநி முருகன் கோயிலின் உப கோயிலான குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா நடப்பது வழக்கம்.இதற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் விடுதி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோடை இன்டர்நேஷனல் விடுதி நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன், இயக்குனர்கள் தங்கவேல், ஜீவானந்தம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.