உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடையில் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்:கொடைக்கானலில் பனிமூட்டம் அதிகரித்து கடுங்குளிர் நிலவ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொடைக்கானலில் ஒரு வாரமாக உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறண்ட வானிலை நீடித்து வந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. இயல்பை காட்டிலும் பகலில் குளிர் நிலவியது. இதனால் ஸ்வட்டர் அணிந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சென்றனர்.வழக்கத்திற்கு மாறாக நேற்று மாலை கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி