உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்காக வடமதுரை ஓட்டலில் உணவு இலவசம்

அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்காக வடமதுரை ஓட்டலில் உணவு இலவசம்

வடமதுரை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி வடமதுரை ஓட்டலில் நாளை (ஜன.22) இலவச உணவு வழங்கப்படும் என அதன் உரிமையாளர் ஏ. மகேஸ்வரன். தெரிவித்துள்ளார்.வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அன்பு பெயரில் ஓட்டல் நடத்துபவர் ஏ. மகேஸ்வரன். நாளை (ஜன. 22) அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு இவரது ஓட்டலில் அன்று காலை முதல் சைவ உணவு இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், ''நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெருமையாக அயோத்தியில் ராமர் கோயில் உருவாகி உள்ளது. இதற்காக எனது சிறிய பங்களிப்பாக கும்பாபிஷேக நாளில் அனைவருக்கும் இலவசமாக சைவ உணவு வழங்க முடிவு செய்துள்ளோம். வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தால் பார்சல் மூலமும் சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என 3 முறை கூறி சென்றாலே போதும். இதற்கான பாதுகாப்பு வழங்க போலீசாரிடம் கேட்டுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ