| ADDED : பிப் 22, 2024 06:20 AM
சின்னாளபட்டி: காந்திகிராமத்தில் நடந்த மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லுாரி முதலிடம் வென்றது.காந்திகிராம பல்கலையில் ஆடவருக்கான மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி பிப். 17 முதல் 19 வரை நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன. நாக்-அவுட் ,லீக் முறையில் நடந்த போட்டியில் நான்கு அணிகள் வீதம் லீக் கட்டத்தில் நுழைந்து முறையை ரொக்கப்பரிசு,கோப்பையை வென்றன.இதில் சென்னை லயோலா கல்லுாரி முதலிடம் பெற்று 15 ஆயிரம் ரூபாய் பரிசை வென்றது. காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் அணி 2ம் இடம், நசரேத் மார்கோசிஸ் கல்லுாரி 3ம் இடம், காந்திகிராம பல்கலை அணி 4ம் இடம் பெற்றன.இதற்கான பரிசளிப்பு விழா பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கூட்டுறவுத்துறை பேராசிரியர் பிச்சை விளையாட்டு வீரர்களுக்கு பரிசு, கோப்பைகளை வழங்கினார். ஏற்பாடுகளை காந்திகிராம பல்கலை உடற்கல்வி இயக்குனர் சுகுமார் தலைமையில் உடற்கல்வி,யோகா மைய பணியாளர்கள் செய்திருந்தனர்.