| ADDED : மார் 11, 2024 06:24 AM
பிளக்ஸ் கட்டைகளால் ஆபத்துதாடிக்கொம்பு பேரூராட்சி அருகே ரோட்டில் பிளக்ஸ் போர்டு கட்டப்பட்ட கட்டைகளை அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துக்களும் அடிக்கடி நடக்கின்றன. பிளக்ஸ் போர்டு கட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் கருப்புசாமி, தாடிக்கொம்பு.------..........பெயர் பலகையால் தடுமாற்றம்வடமதுரை வேலாயுதம்பாளையம் ரோட்டிலிருந்து சிட்டம்பட்டி கிராமம் 100 மீட்டர் துாரத்தில் உள்ளது. ஆனால் ரோடு பிரியும் பகுதியிலிருக்கும் நெடுஞ்சாலை பலகையில் ஒரு கி.மீ., என குறிப்பிட்டுள்ளது. வெளியூர் வாசிகள் வழிதடுமாறுகின்றனர். எனவே பலகையில் சரியான துார அளவை எழுத வேண்டும். கணேசன், வடமதுரை.-------.........அச்சத்தை ஏற்படுத்தும் கம்பிகள்ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரயில்வே மேம்பாலத்தின் மேல் சேதமடைந்து கம்பிகள் வெளியே நீட்டி கொண்டுள்ளது. இரவில் இவ்வழியில் செல்வோர் மக்கள் தடுமாறுகின்றனர். பெரிய விபத்து ஏற்படும் முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் ஒட்டன்சத்திரம்.-------.........குப்பையால் உருவாகும் சீர்கேடுபழநி இடும்பன் கோயில் அருகே பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பை கொட்டி குவிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் தொடர்ந்து பாதிப்பை சந்திக்கின்றனர். குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்து,பழநி.--------.......பள்ளத்தால் பரிதவிப்புஆத்துார் ஒன்றியம் ஆரியநெல்லுாரில் 2 நாட்களுக்கு முன் போடப்பட்ட தார்ரோடு இருபுறமும் பள்ளமாக காணப்படுகிறது. டூவீலர்கள் இவ்வழியில் செல்லும் போது சில நேரங்களில் பள்ளம் தெரியாமல் சறுக்கி கீழே விழுகின்றனர். பள்ளத்தை சீரமைக்க வேண்டும். ஸ்டீபன்,ஆரியநெல்லுார்.--------........சேதமான பாலத்தால் அச்சம்திண்டுக்கல் -பழநி ரோடு கோவில்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் பாலம் இடிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் குழந்தைகள், முதியோர் அச்சத்துடன் உள்ளனர். பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யப்பன், ரெட்டியார்சத்திரம்.--------.......சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுநீர்திண்டுக்கல் முருகபவனம் இந்திரா நகரிலிருந்து முத்தழகுபட்டி செல்லும் ரோட்டில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டி பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கால்வாய் அமைத்து ரோடை புதுப்பிக்க வேண்டும். ஸ்டீவன் ராஜ், திண்டுக்கல்...............................--------