உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2026-ல் அ.தி.மு.க., தலைமையில் பொற்கால ஆட்சி அமைவது உறுதி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

2026-ல் அ.தி.மு.க., தலைமையில் பொற்கால ஆட்சி அமைவது உறுதி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல் : 2026-ல் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் பொற்கால ஆட்சி அமைவது உறுதி, அதற்காக தொண்டர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். 2026 பொதுத்தேர்தலையொட்டி சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள பூத் கிளைகள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்த பயிற்சிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக நிர்வாகிகள் மாணிக்கம், கவி செல்வம் தங்கம், செல்வகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான பூத் ஏஜென்ட் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'வரக்கூடிய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றியை பெறவுள்ளது. பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுபேற்பார். எனவே, தொண்டர்கள் திறம்பட செயலாற்றி மீண்டும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி அமைய பாடுபட வேண்டும்'என்றார். நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,தென்னம்பட்டி பழனிச்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தர்மராஜ், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், சேசு,முரளி, இக்பால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நெப்போலியன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வீரமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் சிவபாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !