மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்.........
30-Sep-2024
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.நத்தம் அருகே பரளி அழகாபுரி பகுதியில் உள்ள மாந்தோப்பில் சிலர் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தினர். இதன் தகவல் அறிந்து அங்கு சென்ற நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் கும்பலை சுற்றி வளைத்தனர். இதில் அழகாபுரியை சேர்ந்த சசிகுமார் 37, முத்தையா 49, பச்சை 31, சேர்வீடு புதுாரை சேர்ந்த அடைக்கன் 34, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
30-Sep-2024