உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

 இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

ஒட்டன்சத்திரம்: உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை நோய் கண்டுபிடிப்பு இலவச ஆலோசனை மருத்துவ முகாம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.ஒட்டன்சத்திரம் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் பசீர் அகமது, நீரினை பயன்படுத்துவோர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் தன்ராஜ் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஆசைத்தம்பி தலைமையிலான மருத்துவ குழுவினர் 50 வயதிற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தின் அளவவை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். ஏற்பாடுகளை வாரியர் டிரஸ்ட் நிர்வாகிகள், வாக்கிங் கிளப் துணை ஒருங்கிணைப்பாளர் போஸ் தங்கராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ