உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மறைவு

காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மறைவு

சின்னாளபட்டி: திண்டுக்க்ல மாவட்டம் காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரான டாக்டர் கவுசல்யாதேவி 94, காலமானதை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி உட்பல பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.காந்திகிராம அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான இவர் கஸ்துாரிபா மருத்துவமனை தலைமை மருத்துவராகவும் இருந்தார். 60 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட இவர் வயது முதிர்வால் நேற்று இறந்தார். இவரது சேவைக்காக ஆர்.ஆர்.கைத்தான் தங்கப்பதக்கம், ஸ்ரீ ரத்னா, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி, அறம், உத்தமர் ஓமந்தூரார், பிரொபோஸ் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.காந்திகிராம அறக்கட்டளையின் அன்னபூர்ணா பந்தலில் உள்ள இவரது உடலுக்கு சமூக, தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இரங்கல் செய்தியில், தமிழகத்தின் நடமாடும் அன்னை தெரசாவாக வாழ்ந்து சேவையின் சிகரமாகவே மறைந்த டாக்டர் கவுசல்யா தேவியின் இறப்பு வேதனைக்குரியது. எளிமையின் இலக்கணமாக, சேவையே தனது முழு வாழ்க்கையாக அர்ப்பணித்துக் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை