உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் வீசப்பட்ட விநாயகர் சிலை பழநி அருகே மறியல்

ரோட்டில் வீசப்பட்ட விநாயகர் சிலை பழநி அருகே மறியல்

ஆயக்குடி:திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே கோவிந்தாபுரத்தில் விநாயகர் சிலையை ரோட்டில் வீசி எறிந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கோவிந்தாபுரத்தில் திண்டுக்கல்- -பழநி நெடுஞ்சாலை அருகே விநாயகர் கோயில் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக கோயிலை அகற்றி வருவாய்த்துறை மூலம் வேறு இடம் ஒதுக்கப்பட்டது. அங்கேயே அகற்றப்பட்ட விநாயகர் சிலை, வேல், மூஞ்சுறு வாகன சிலை வைக்கப்பட்டது. கோயில் கட்ட ஒதுக்கிய நிலத்தின் அருகே இருந்தவர்கள் கோயில் கட்ட ஆட்சேபம் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் கோயில் கட்டுமான பணி துவங்கியது. இதற்கிடையில் அங்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலை, வேல், மூஞ்சுறு வாகன சிலை ரோட்டில் வீசப்பட்டிருந்தது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த மறியலால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.சிலையை ரோட்டில் வீசியவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது பெண்மணி ஒருவர் பெட்ரோலை உடலில் ஊற்றினார். போலீசார் கேனை பறித்து அவரை அப்புறப்படுத்தினர். தாசில்தார் சக்திவேலன், இன்ஸ்பெக்டர் செல்வி பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை