உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்திரையிடாத தராசுகள் பயன்பாடு தாராளம் கண்காணிப்பு இல்லாததால் பாதிப்பு

முத்திரையிடாத தராசுகள் பயன்பாடு தாராளம் கண்காணிப்பு இல்லாததால் பாதிப்பு

மாவட்டத்தை பொறுத்தமட்டில் நாள்தோறும் ஏராளமான இடங்களில் வாரச்சந்தை , ரோட்டோர கடைகள் செயல்படுகின்றன.காய்கறி, பழங்கள் ,அத்தியாவசிய பொருட்களை விற்கும் நபர்கள் தாங்கள் பயன்படுத்தும் தராசுகளை முத்திரையிடாமால் உள்ளனர். இதனால் எடையளவு குறைவாகி ஏமாற்றும் போக்கில் ஈடுபடுகின்றனர். இச்சூழலில் தாங்கள் வாங்கும் பொருட்கள் சரியான எடை இல்லாத நிலையில் சம்பந்தப்பட்டவர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிலை உள்ளது. மேலும் வணிக நிறுவனங்களிலும் இத்தகைய நிலை நீடித்து வருகிறது. நவீன காலகட்டத்தில் எடை அளவு துல்லியமாக கணிக்கப்படும் நிலையில் இது போன்ற முத்திரையிடப்படாத தராசுகளால் ஏமாற்று நடவடிக்கை தொடர்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுக்காது உள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் முத்திரையிடும் அதிகாரிகள் ஆய்வு செய்து எடை அளவிற்கு பயன்படுத்தும் தராசுகளை ஒழுங்குபடுத்த இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ