உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நஷ்ட ஈடு தராததல் அரசு பஸ் ஜப்தி

 நஷ்ட ஈடு தராததல் அரசு பஸ் ஜப்தி

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. நிலக்கோட்டை அருகே எத்திலோடு கருத்தாண்டிபட்டியை சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி 63. 2024ல் கருத்தாண்டிப்பட்டியிலிருந்து விளாம்பட்டி செல்வதற்காக அதே பகுதியை சேர்ந்த இளையராஜா டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். துரைக்குளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் மோதி இறந்தார். இந்த வழக்கில் நஷ்ட ஈடு கேட்டு ராஜேஸ்வரி மகன் தேசிங்கு திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வட்டியுடன் சேர்த்து ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 415 யை நஷ்டஈடாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தொகையை வழங்கவில்லை. இதையடுத்து நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை செல்ல இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை