உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அரசு ஊழியர்கள் மறியல்; 190 பேர் கைது

 அரசு ஊழியர்கள் மறியல்; 190 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 190 பேரை போலீசார் கைது செய்தனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். செயலாளர் சுகந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 190 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை