உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜி.டி.என். கல்லுாரியில் கருத்தரங்கம்

ஜி.டி.என். கல்லுாரியில் கருத்தரங்கம்

திண்டுக்கல்: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி சுற்றுச்சூழல் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தாளாளர் ரெத்தினம்,கல்லுாரி இயக்குனர் துரை ரெத்தினம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் ,காதர் மொய்தீன் பேசினர். மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. மாணவர்கள் கையில் மஞ்சள் பையை ஏந்தி நெகிழியை ஒழிப்போம் என உறுதிமொழி எடுத்தனர். சுற்றுச் சூழல் கழக துணை ஒருங்கிணைப்பாளர் அருண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ