உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குஜராத் முருங்கைக்காய் கிலோ ரூ.260

குஜராத் முருங்கைக்காய் கிலோ ரூ.260

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல்மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குஜராத் முருங்கைக்காய் கிலோ ரூ.260க்கு விற்பனை ஆனது.ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் குறைந்தது.இந்நிலையில் சுப முகூர்த்தம் , சபரிமலை சீசன் காரணமாக முருங்கைக்காயின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது குஜராத் மாநிலம் நாசிக் பகுதியில் அதன் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. பற்றாக்குறையை ஈடு கட்ட அங்கு விளைந்த முருங்கைக்காய் ரயில் மூலம் கோவை வந்து லாரி மூலம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு கிலோ ரூ.260 க்கு விற்பனை ஆனது.மழை காரணமாக உள்ளூர் முருங்கைக்காய் நிறம் மாறி தரம் குறைவாக இருப்பதால் கிலோ ரூ.130 க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ