மேலும் செய்திகள்
பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு
29-Oct-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தடை குட்கா விற்ற கடைகளுக்கு சீல் வைத்த உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.தடை குட்கா பயன்பாடு தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி உத்தரவில் அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்டோர் திண்டுக்கல் நகர், குட்டியப்பட்டி, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் மாறுவேடத்தில் சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குட்கா பொருட்களை கேட்டுள்ளனர். கடைக்காரரும் அதிகாரிகள் என தெரியாமல் எடுத்து கொடுத்தபோது சிக்கினார். கடைக்குள் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.
29-Oct-2024