உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுகாதார நிலைய கூரை சீரமைப்பு

சுகாதார நிலைய கூரை சீரமைப்பு

வடமதுரை: அய்யலுார் மணியகாரன்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைப்பு பணி செய்யப்பட்டது. அய்யலுார் மணியகாரன்பட்டியில் புதிதாக கட்டி 2024ல் திறக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலைய கூரையின் உட்புற பூச்சு சில வாரங்களுக்கு முன்னர் பெயர்ந்து விழுந்தது. கூரையின் உட்புற சிமென்ட் பூச்சு பலமிழந்து காணப்பட்டதால் மேலும் சிதைவு ஏற்பட்டு விழும் ஆபத்து இருந்ததால் மக்கள், பணியாளர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடக்கும் நிலை இருந்தது.இதுகுறித்து தினமலர்நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமான கூரை பகுதியை அதிகாரிகள் சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை