| ADDED : நவ 15, 2025 04:56 AM
ஒட்டன்சத்திரம்: பல ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்த பல அடிப்படை வசதிகளை நிறைவேற்றியால் அமைச்சர் சக்கரபாணிக்கு மலையில் விளைந்த பொருட்களை சீர்வரிசை யாக எடுத்து சென்று மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சியில் வடகாடு, கண்ணனூர், பெத்தேல்புரம், பால் கடை, புலிக்குத்திக்காடு, சிறுவாட்டுக்காடு உட்பட பல மலை கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த ரோடு, மின்சாரம், புதிய வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியதற்கும், மலைவாழ் கிராமங்களுக்கு கட்டணமில்லா பஸ் வசதியை கொண்டு வந்ததற்கும், பரப்பலாறு அணையை சுற்றுலா தலமாக்கிதற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மலையில் விளைந்த பலாப்பழம், வாழைப் பழத்தார்கள், இளநீர், காய்கறிகளை சீர்வரிசை பொருட்களாக எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க அமைச்சர் சக்கரபாணி வீட்டிற்கு சென்று மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.